Enable Javscript for better performance
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட அளவிலான பள்ளிகல்விக் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது.

    வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.கருணாநிதி, வி.ராம்குமார், காளியப்பன், காவல் துணைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தனியார் பள்ளி வாகனங்களில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, பர்மிட், தகுதி, காப்புச் சான்று, வேக கட்டுப்பாட்டுக் கருவி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

    240 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் விதிமுறைகளுக்கு உள்படாத 15 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai