Enable Javscript for better performance
முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்த புதிய கட்சி- Dinamani

சுடச்சுட

    

    முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்த புதிய கட்சி

    By ஆம்பூர்  |   Published on : 21st May 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம்பூர் தொகுதியில் புதிய கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

    ஆம்பூர் தொகுதிக்கான தேர்தலில் 79,182 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வி.ஆர்.நசீர் அஹமத் 51,176 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

    இவருக்கு அடுத்தபடியாக, புதிய கட்சியாக உதயமான சூப்பர் நேஷன் பார்ட்டியின் நிறுவனத் தலைவரும், ஆம்பூர் தொகுதி வேட்பாளருமான மதார் கலீலூர் ரஹ்மான் 7,640 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

    முக்கிய கட்சிகளான தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி, விஜயபாரத மக்கள் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிய கட்சியான சூப்பர் நேஷன் பார்ட்டியின் வேட்பாளர் மதார் கலீலூர் ரஹ்மான் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    எப்படியும் வைப்புத் தொகையை பெற்றுவிடுவோம் என்று அக்கட்சியினர் முனைப்பாக தேர்தல் பணியாற்றினர்.

    இவர் பெறும் வாக்குகள் தான் தோல்வியைத் தழுவும் வேட்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    புதிய கட்சி, புதிய சின்னம் என்பதால் மக்களுக்கு அக்கட்சி மீது இன்னும் ஈர்ப்பு ஏற்படவில்லை என்பது தேர்தல் முடிவிலிருந்து தெரிகிறது. இருந்தபோதிலும் முதல் தேர்தலிலேயே 3-வது இடத்தை இக்கட்சி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai