Enable Javscript for better performance
ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு

    By DIN  |   Published on : 01st October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூரில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
    ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டாக போட்டியிட முடிவு செய்தன. அதன்படி மொத்தமுள்ள 36 வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 8 வார்டுகளும், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 4 இடங்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை எண்ணிக்கையில் ஒப்புக்கொண்டன.
    இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியும் குறிப்பிட்ட வார்டுகளை 2 பேரும் கேட்பதால் வார்டு பிரிப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி கேட்ட வார்டுகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, மனிதநேய மக்கள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே வார்டு ஒதுக்குவதில் பிரச்னை உள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி உடன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai