சுடச்சுட

  

  ஆற்காடு அருகே இருவீடுகளின் பூட்டை உடைத்து, 21 பவுன்  நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆற்காட்டை அடுத்த திமிரி கிருபானந்தவாரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (40). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநனராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர்
  வீட்டுக்கு சென்றார்.
   இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாஜி, உள்ளே சென்று பார்த்தார்.
  அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் நகை,  ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மற்றொரு சம்பவம்: இதேபோல், கலவை பகுதியைச் சேர்ந்தவர் அரிதாஸ் (37). விவசாயி. இவரது மனைவி கார்த்திகா. இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை, வீட்டைப் பூட்டி, சாவியை மறைவிடத்தில் வைத்துவிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
  பின்னர், மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பிரோவில் இருந்த 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai