இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
By DIN | Published on : 01st October 2016 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடியாத்தம் ரோட்டரி சங்கம், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, போடிப்பேட்டை லிங்காயத் சமூகத்தினர் இணைந்து பெண்களுக்கான 6 மாத கால இலவச தையல் பயிற்சி முகாமை போடிப்பேட்டையில் புதன்கிழமை தொடங்கினர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ஜே.ஏ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.அமுதா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். ரோட்டரி செயலர் கே.எம்.ராஜேந்திரன், நிர்வாகிகள் என்.எஸ்.குமரகுரு, என்.சத்தியமூர்த்தி, எஸ்.வேல்முருகன், திட்ட அலுவலர் வி.பரந்தாமன், போடிப்பேட்டை தலைவர் எஸ்.சி.சோமசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.