சுடச்சுட

  

  இளையோர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி: ஆம்பூர் கன்கார்டியா பள்ளி முதலிடம்

  By DIN  |   Published on : 01st October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற இளையோர் சூப்பர் கிங்ஸ் டி20 சாம்பியன் ஷிப் போட்டியில் ஆம்பூர் கன்கார்டியா பள்ளி அணி வெற்றி பெற்றது.
  இந்தியா சிமென்ட்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ஆதரவுடன் வேலூர், சேலம், மதுரை உள்பட 10 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக இளையோர் சூப்பர் கிங்ஸ் டி20 சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
  வேலூரில் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கன்கார்டியா பள்ளி அணியும், வித்யா விகார் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.
  முதலில் களமிறங்கிய கன்கார்டியா அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஜெ.நவீன் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், மற்றொரு வீரரான சின்னா 33 ரன்கள் எடுத்தார்.
  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வித்யா விகார் பள்ளி அணி 17.5 ஓவர்களில் 42 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கன்கார்டியா அணி வீரர் சுனில் 3 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். சிறந்த வீரராக ஆர்.நிதிஷ்குமாரும், பந்துவீச்சாளராக வி.பிரீத்தீஷும் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற கன்கார்டியா அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ்.சரத் பரிசுக் கோப்பை வழங்கினார்.
  மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் டி.கிருஷ்ணன், செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  
  இந்தப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற கன்கார்டியா அணி வருகிற டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai