சுடச்சுட

    

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனு

    By DIN  |   Published on : 01st October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. வேலூர் மேற்கு மாவட்டத்துக்கு பார்வையாளர்களாக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மொடக்குறிச்சி பழனிச்சாமி, பலராமன், முன்னாள் எம்.பி. தண்டாயுதபாணி, சுமதி அன்பரசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆம்பூர் அரிமா சங்க அரங்கில் வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன், ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் பிரபு, கொத்தூர் மகேஷ், பேர்ணாம்பட்டு சுரேஷ், சமியுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai