சுடச்சுட

  

  ஆலங்காயம் அருகே புளியமரத்தில் மினி லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
  ஆலங்காயத்தை அடுத்த மிட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). மினி லாரி ஓட்டுநர். அதே பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (40). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு மிட்டூரிலிருந்து மினி லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு வந்து ஆலங்காயத்தில் இறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இரவு 10.30 மணியளவில் மிட்டூருக்கு புறப்பட்டனர்.
  அப்போது ஆலங்காயம்-திருப்பத்தூர் சாலையில் நரசிங்கபுரம் அருகே வேகமாகச் சென்ற மினி லாரி திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.
  இதில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai