Enable Javscript for better performance
மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

    By DIN  |   Published on : 01st October 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மஹாளய அமாவாசையை முன்னிட்டு வேலூரில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு வெள்ளிக்கிழமை தர்ப்பணம் கொடுத்தனர்.
    வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே முத்துமண்டபத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் பூஜை பொருள்களுடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதேபோல, மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் குளித்து முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் கொடுத்தனர்.
    மறைந்த தேசத் தலைவர்களுக்கு தர்ப்பனம்
    மகாளய அமாவாசையையொட்டி, மறைந்த தேசத் தலைவர்களுக்கு விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் தர்ப்பனம் அளிக்கும் நிகழ்ச்சி துத்திப்பட்டு பிந்துமாதவ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் தலைமை வகித்து மறைந்த தேசத் தலைவர்களுக்கு தர்ப்பனம் அளித்தார்.
    கட்சி நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், விஜய், சசிகுமார், ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai