சுடச்சுட

    

    வந்தவாசி அருகே மின்னல் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த சவுந்தர்யபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட மணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் அரிகிருஷ்ணன் (13). இவர், சவுந்தர்யபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    அரிகிருஷ்ணன் புதன்கிழமை இரவு வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், அரிகிருஷ்ணன் மீது மின்னல் பாய்ந்ததாகத் தெரிகிறது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இது குறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai