சுடச்சுட

    

    அரக்கோணம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதில் திமுக - காங்கிரஸ் இடையே சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.
    தமிழகத்தில் பரவலாக திமுகவுடன் காங்கிரஸ் உடன்பாடு வைத்துக்கொணடாலும் பல இடங்களில் திமுக போட்டியிடும் இடங்களில் காங்கிரஸார் தொடர்ந்து மனு தாக்கலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரக்கோணம் நகரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே சனிக்கிழமை சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. வேலூர் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலர் ராஜ்குமார், நகரச் செயலர் ஐ.ராப்சன், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரசாத் மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் துரைசீனிவாசன், லவக்குமார், ஜி.எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    இதில் உடன்பாடு எட்டப்பட்டு அரக்கோணம் நகரம் 12,13,20,32 ஆகிய நான்கு வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai