சுடச்சுட

    

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து சனிக்கிழமை போலீஸில் ஒப்படைத்தனர்.
    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆற்காட்டை அடுத்த கலவையைச் சேர்ந்த கல்பனாவுக்கு (22) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெண் குழந்தை
    பிறந்தது.
    சனிக்கிழமை அதிகாலை குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு கழிப்பறைக்குச் சென்று விட்டு திரும்பிய போது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து மருத்துவமனை காவலாளிகளும், பொதுமக்களும் மருத்துவமனையில் குழந்தையைத் தேடியுள்ளனர்.
    அப்போது, மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் வெளியேறிய பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தியதில் தனது மகளுக்கு பிறந்த குழந்தை எனக் கூறியுள்ளார்.
    சந்தேகமடைந்த காவலாளிகள் பெண்ணை அழைத்து வந்து விசாரித்தபோது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட அவரது மகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, திருடப்பட்ட குழந்தை கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    பின்னர் அப்பெண்ணை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி (38) என்பது தெரியவந்தது.
    இதையடுத்து அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai