சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலின் ஆறாம் நாளான சனிக்கிழமை 513 பேர் மனு தாக்கல் செய்தனர்.
  வேலூர் மாநகராட்சியில் தேமுதிக 2 பேர் உள்பட 16 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரையில் 211 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  அதேபோல, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 48, உறுப்பினருக்கு 339 பேர், நகராட்சிகளில் 88 பேர் என 513 பேர் மனு தாக்கல் செய்தனர்.
  வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதிலும் 14,878 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு உகந்த நாளாக இல்லை என்ற காரணத்தினால் சனிக்கிழமை குறைவான எண்ணிக்கையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  இறுதி நாளான திங்கள்கிழமை (அக். 3) தாக்கல் செய்யாத அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
  அரக்கோணத்தில் விறுவிறுப்பில்லை
  அரக்கோணம், அக். 1: அரக்கோணத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கலில் விறுவிறுப்பில்லாத நிலை சனிக்கிழமை காணப்பட்டது.
  அரக்கோணம் நகராட்சி வார்டுகளுக்கு சனிக்கிழமை 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுகவில் மூவரும், காங்கிரஸில் ஒருவரும், நாம்தமிழர் கட்சியில் ஒருவரும், மதிமுக வேட்பாளராக சத்தியமூர்த்தி வார்டு 15-க்கும், மேலும் சுயேச்சைகளாக மூவரும் என 9 பேர் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல்
  செய்தனர்.
  சனிக்கிழமை விடுமுறை நாள் என பலர் நினைத்திருந்ததால் இன்று பலர் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை எனக் கூறப்படுகிறது.
  அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு எண் 40-க்கும் மேலும் ஊராட்சி ஒன்றியக் குழு 12 வார்டுகளுக்கும் சனிக்கிழமை எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மூவரும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 12 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai