சுடச்சுட

  

  இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கு: கணவர் கைது

  By DIN  |   Published on : 02nd October 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த ஜனவரி மாதம் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெண், இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  அரக்கோணம் நகரம் அசோக்நகர், அன்னை சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). இவரது மனைவி திவ்யா (26), குழந்தைகள் நிதிஷ்கன்னா (3), அம்மு (1). இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் திவ்யா, தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தீக்குளித்ததில் அவர்கள் மூவரும் இறந்தனர். இவ்வழக்கை தற்கொலை வழக்காகப் பதிந்த அரக்கோணம் நகர போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திவ்யாவின் சகோதரர் அரக்கோணம் விண்டர்பேட்டையைச் சேர்ந்த சுரேந்தர்குமார் (20) தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சகோதரியின் கணவர் அவர்களை தற்கொலை செய்துகொள்ள தூண்டியிருக்கலாம் எனவும் புகார் அளித்தார்.
  புகாரின் மீது தொடர் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் அன்புசெல்வி உள்ளிட்ட குழுவினர், சிவகுமாரை, தற்கொலைக்கு தூண்டியதாக சனிக்கிழமை கைது செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai