Enable Javscript for better performance
இளைஞர் தீக்குளித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் அருகே கடப்பேரி கிராமத்தில் தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார்.
    காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (23). லாரி ஓட்டுநரான இவர் கடந்த ஒரு வருடமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி சூர்யா தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த சூர்யா வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai