சுடச்சுட

    

    இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் மற்றும் சங்கத்தின் தேர்தல் மகாராஷ்டிரா மாநிலம் ஹவுரங்காபாத்தில் செப்.26-ஆம் தேதி நடைபெற்றது. அங்கு நடந்த தேர்தலில் வேலூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எம்.வி.சுவாமிநாதன் போட்டியிட்டார். அவர் இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார இணைச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் 30-ஆம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தலில் மாநில செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்கத்தின் செயலாளர் பி. ஹரிஹரன், தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்
    பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai