சுடச்சுட

    

    வாலாஜாபேட்டையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    வாலாஜாபேட்டை, அம்பேத்கர் நகர், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பாபு (40). கயிறு திரிக்கும் தொழிலாளியான இவர், கடந்த மாதம் 19-ஆம் தேதி வீட்டின் முன்பு இருந்தபோது, உறவினர் ஜெயசீலனுடன் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து பாபுவை ஜெயசீலன் ஜல்லிகற்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாபு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிசிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாபு சனிக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் விஜிகுமார், உதவி ஆய்வாளர் முனிசாமி ஆகியோர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஜெயசீலனை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai