சுடச்சுட

  

  பெருமாள் கோயில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விழா

  By DIN  |   Published on : 02nd October 2016 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்பூர் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
  ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகே, அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், விண்ணமங்கலம் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
  வடச்சேரி சென்னகேசவ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் கருட வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது.
  வாணியம்பாடியில்...
  வாணியம்பாடி, அக். 1: வாணியம்பாடி பெரியப்பேட்டையில் உள்ள அழகுபெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. உதயேந்திரம் பகுதியில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோயில், திம்மாம்பேட்டை பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. ஆவாரங்குப்பம் பகுதியில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள திருமால்முருகன் கோயிலில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. மேலும் கருட சேவை
  உற்சவமும் நடைபெற்றது.
  அம்பூர்பேட்டை பூக்கடை வீதி, பெரியபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களிலும், ஆலங்காயத்தை அடுத்த காவலூர் வனப் பகுதியில் அமைந்துள்ள சென்றாயசாமி பெருமாள் கோயிலிலும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai