Enable Javscript for better performance
முதியோர் அனுபவங்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: நீதிபதி அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் அனுபவங்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: நீதிபதி அறிவுரை

    By DIN  |   Published on : 02nd October 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதியோரின் அனுபவங்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி கூறினார்.
    சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வேலப்பாடியில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு தலைமை வகித்து முதியோர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி பேசியதாவது: வயது முதிர்ந்தவர்களின் அனுபவங்களை இளைஞர்கள் தெரிந்து கொண்டால் அனைத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். முதியோர்களின் அறிவுரைகளை ஏற்று வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்றார். முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.நடராஜன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வி.தாமோதரன், நீதிபதிகள் லதா, லாவண்யா, வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். முதியோர் இல்ல செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
    சன்பீம் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், வீணை வாசிப்பு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    ஏற்பாடுகளை சட்டப் பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் கேசவன் செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai