சுடச்சுட

  

  இந்திய இளம் டோஸ்ட் மாஸ்டராக தேர்வு: விஐடி மாணவருக்கு வேந்தர் பாராட்டு

  By DIN  |   Published on : 03rd October 2016 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய இளம் டோஸ்ட் மாஸ்டராக விஐடி மாணவர் தேர்வு பெற்றமைக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டுத் தெரிவித்தார்.
   கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு பேச்சாற்றலை வளர்க்கவும், தொடர்பியல் மற்றும் ஆளுமை திறனை உருவாக்கும் வகையிலும் அதற்கான பயிற்சி அளிக்க சர்வதேச அளவில் டோஸ்ட் மாஸ்டர் கிளப் அமைப்பு செயல்பட்டு வருகிறது. 138 நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் இயங்கி வரும் சுமார் 20 ஆயிரம் கிளப்புகளில் 3.50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
   டோஸ்ட் மாஸ்டர் பயிற்சியில் சாதனை படைத்த 15 ஆயிரம் பேருக்கு மதிப்புமிக்க சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விஐடி பல்கலை.யில் 2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த கிளப்பில் தற்போது 15 டோஸ்ட் மாஸ்டர் கிளப்கள் உள்ளன. இவற்றில் 350 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
  இவர்களுக்கு பேச்சாற்றல், ஆளுமைத் திறன், தொடர்பியல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு பொது இடங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பலரது முன்னிலையில்  தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விஐடி மாணவர் நவநீத் வி.கணேஷ் தொடர்பியல், ஆளுமைத் திறனில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய டோஸ்ட் மாஸ்டரின் மதிப்புமிக்க இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
   இந்தியாவில் இந்த விருது பெறும் முதல் நபராகவும், உலகளவில் ஐந்தாவது மாணவர் என்ற சாதனையையும் நவநீத் படைத்துள்ளார்.  விஐடி மாணவர் நவநீத்தின் இந்த சாதனையை இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சாதனை படைத்த மாணவரை, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai