உள்ளாட்சித் தேர்தல் 650 துப்பாக்கிகள் போலீஸிடம் ஒப்படைப்பு
By DIN | Published on : 03rd October 2016 02:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் பெறப்பட்டுள்ள 650 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வங்கிகள், தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேலூர் மாவட்டம் முழுவதிலும் 1,157 துப்பாக்கிகள் உரிமம் வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால் வங்கிகள் பாதுகாப்புக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதைத் தவிர்த்து எஞ்சியவற்றை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து உரிமம் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ள 650 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் கூறியதாவது:
மாவட்டம் முழுவதிலும் வங்கிகள், தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக 1,157 துப்பாக்கிகளுக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வங்கிகள் பாதுகாப்புக்கு உரிமம் பெறப்பட்டுள்ள 366 துப்பாக்கிகளைத் தவிர்த்து எஞ்சியவற்றை திரும்பப் பெற காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
இதுவரையில் 650 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எஞ்சியவை ஒரு வாரத்துக்குள் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.