சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் ஏராளமானோர் தங்களது ஆதரவாளர்களுடன் மனு தாக்கலுக்கு வந்ததால் அலுவலகங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டதோடு, சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் மனு தாக்கல் செய்யாத 20-க்கும் அதிகமானோர், அதிமுகவின் 16-வது வார்டு வேட்பாளர் நிர்மலா முரளி ஆகியோர் ஆதரவாளர்களுடன் மனு தாக்கல்
    செய்தனர்.
    அதேபோல, பாஜக, தமாகா, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சைகளின் ஆதரவாளர்களுடன் வாகனங்களில் அணிவகுத்து மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
    ஏற்பட்டது.
    அதேபோல, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய அதற்கென ஒதுக்கப்பட்ட அலுவலகங்களில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
    கூடுதல் வார்டில் காங்கிரஸ் மனு தாக்கல்: மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் தராமல் 9,13,24,35,53,54 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டதால் அதனோடு சேர்த்து மேலும் சில வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் மனு தாக்கல்
    செய்தனர்.
     இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டதற்கு, பங்கீடு முடிக்காமல் 54 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைமை, 6 வார்டுகளை ஒதுக்கியது.  ஏற்கெனவே வெற்றி பெற்ற நான்கு வார்டுகளை தர வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்ததால் அந்த 6 வார்டுகளைத் தவிர்த்து இன்னும் சில வார்டுகளில் மனுதாக்கல் செய்துள்ளோம்.  நாங்கள் கேட்கும் வார்டுகள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சிய வார்டுகளில் வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற்று விடுவர் என்றனர்.
     அதேபோல, திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அளிக்கப்பட்டதைப் போல இரு வார்டுகள் ஒதுக்கப்பட்டதால் அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி 28,29,30,53,54,56 ஆகிய 6 வார்டுகளில் தனித்துப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளது.
     எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாத தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 6,9,12,27,32,40,49,50,59 ஆகிய வார்டுகளில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai