சுடச்சுட

    

    காங்கிரஸை எதிர்த்து திமுக போட்டி: காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்

    By DIN  |   Published on : 03rd October 2016 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக திமுக போட்டியிடுவதாகக் கூறி, அரக்கோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம் நகராட்சி வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதில் திமுக-காங்கிரஸார் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு 12,13,20,32 ஆகிய வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தில் மாவட்ட திமுக துணைச் செயலர்
    என்.ராஜ்குமார், நகர திமுக செயலர் ஐ.ராப்சன் ஆகியோரும் காங்கிரஸ் நிர்வாகிகள் துரைசீனிவாசன், லவக்குமார், ஜி.எஸ்.மூர்த்தி ஆகியோரும் இணைந்து கையெழுத்திட்டனர். இதையடுத்து 13-ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக தமீன் அறிவிக்கப்பட்டார்.
    இந்நிலையில் 13-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட முகமது அலி என்பவருக்கு உதயசூரியன் சின்னத்துக்கான கடிதம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
    இதுகுறித்து அறிந்த காங்கிரஸ் நிர்வாகி துரைசீனிவாசன், கூட்டணி ஒப்பந்தம் மீறப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பழனிப்பேட்டையில் இரட்டைக்கண்வாராவதி அருகே திங்கள்கிழமை காலை துரைசீனிவாசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் லவக்குமார், ஜி.எஸ்.மூர்த்தி, உலகநாதன், 13-ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தமீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    இதுகுறித்து துரைசீனிவாசன் தெரிவிக்கையில், கூட்டணி ஒப்பந்தம் மீறப்பட்டால் 36 வார்டுகளிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான நிலையை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
    இதுகுறித்து நகர திமுக செயலர் ஐ.ராப்சனிடம் கேட்டபோது, கூட்டணி ஒப்பந்தம் மீறப்படாது. வாபஸ் என ஒரு வாய்ப்பு உள்ளது. நிலைமையை சரியாக்கி விடுவோம் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai