சுடச்சுட

    

    மகாத்மா காந்தியின் 147-வது ஜயந்தியை விழாவையொட்டி, ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சியினர் முத்துகடையில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்குரைஞர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் எஸ்.எம்.இப்ராஹீம், பி.மோகன், ராணி கே. வெங்கடேசன்,ஜெ.உத்தமன், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எஸ்சி,எஸ்டி பிரிவு துணைத் தலைவர் வி.நாகேஷ் வரவேற்றார்.
     வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.பஞ்சாட்சரம் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள்  வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
     இதில் நிர்வாகிகள் முருகேஷ், ஆதம் பாஷா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
    குடியாத்தத்தில்...
    குடியாத்தம் காமராஜர் பேரவை சார்பில் காந்தி பிறந்த நாள் விழா, காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இதையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு பேரவை காப்பாளர் எஸ்.அருணோதயம் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கினார். பேரவைத் தலைவர் எம்.வி.பழனி வரவேற்றார். நிர்வாகிகள் எம்.வில்வமணி, எம்.எம்.சிவஞானம், புலவர் ரா.ராமகிருஷ்ணன், கே.விஜயன், கே.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    வேலூரில்...
    வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
    ஆம்பூரில்...
    ஆம்பூர் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர வர்த்தகர் சங்க தலைவர் கே.ஆர்.துளசிராமன் தலைமை வகித்தார். ஆம்பூர் பஜார் பகுதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காந்தி உருவப்படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி உருவச் சிலைக்கும், காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.  செயலாளர் வி.அண்ணாமலை, பொருளாளர் எஸ். தயாளன், துணைச் செயலாளர்கள் ஓ.வி. ராம்குமார், ஏ. தியாகராஜன் மற்றும் பல்வேறு வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    ஆம்பூர் வணிகர் சங்க பேரமைப்பு: ஆம்பூர் வணிகர் சங்கபேரமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
    சங்க அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்துக்கும், இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
    ஆம்பூர் வணிகர் சங்க பேரமைப்பின் செயலாளர் முனீர் அஹமத், துணைத் தலைவர் மஸ்தான், துணைச் செயலாளர் சின்னதம்பி, மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.சேகர், காபந்துக்குழு உறுப்பினர்கள் இ. வெங்கடேசன், பி.கே.மாணிக்கம் மற்றும் பல்வேறு வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள்
    பங்கேற்றனர்.
    வாணியம்பாடியில்...
    வாணியம்பாடியில் காந்தி நற்பணி மன்றம் சார்பில் புதூரில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவுக்கு, காந்தி நற்பணி மன்றத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். சையத் நிசார் அகமத் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.  
     வேலூர் மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தேன்மொழி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் சிவகுமார், மனோகரன் மற்றும் நற்பணி மன்றத்தினர், இளைஞர்கள், மாணவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆலங்காயத்தில் நகர காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் ஜெயபிரகாஷ் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai