சுடச்சுட

  

  சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

  By DIN  |   Published on : 03rd October 2016 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிவில் சர்வீஸ் முதல்நிலை நுழைவுத் தேர்வுக்கான பயிறசி வகுப்பில் சேர வருகிற அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
   ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  இதுகுறித்து அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட அறிக்கை:
   மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலப் படிப்பியல் துறையினால் மாநில அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமியில் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
   2017-ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவம்பர் மாதம் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
   தெரிவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் முதல் 100 பேர் தமிழ்நாடு அரசின் இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு டிச. 5-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு (2017) ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறும். பயிற்சியின் போது தங்குமிடம், உணவு, படிப்பு சாதனங்கள் இலவசமாக அளிக்கப்படும்.
  பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தை மதுரை காமராஜர் பல்கலை. வலைதளமான  w‌w‌w.‌m‌k‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.‌o‌r‌g-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து சான்றிதழ்களின் நகல்களை மனுவுடன் இணைத்து ரூ. 5-க்கான அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட, சுய முகவரி எழுதப்பட்ட இரண்டு அலுவலகக் கவர்களை இணைத்து ஒருங்கிணைப்பாளர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை என்ற முகவரிக்கு வருகிற அக். 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai