Enable Javscript for better performance
ஜவுளிக் கடையில் திருட்டு: 4 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே ஜவுளிக் கடையில் துணிகளைத் திருடியதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
     குடியாத்தம் பிச்சனூரில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் மகேஷ் (33). ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது கடைக்கு துணி வாங்குவது போல் 4 பெண்கள்
    வந்துள்ளனர்.
    ஆனால் எந்த துணியையும் வாங்காமல் அவர்கள் கடையிலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது. சந்தேகத்தின்பேரில், அவர்களின் பைகளை சோதனையிட்டபோது, 10 பேண்ட்களை அவர்கள் கடையில் இருந்து திருடிச் செல்ல இருந்தது தெரியவந்தது.  
    இதுகுறித்த புகாரின்பேரில், நகர போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நரசம்மாள் (70), தேவம்மாள் (55), கிருஷ்ணவேணி (50), கல்யாணி (32) ஆகிய 4 பேரை
    கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai