சுடச்சுட

    

    தமிழக அளவிலான சர்வதேச உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் ஜி.கே.உலகப் பள்ளி 2-வது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
    இப்பள்ளியானது சர்வதேச உள்கட்டமைப்பு, சிறந்த கல்வியை வழங்குதல், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் போன்ற அளவீடுகளில் மிக அதிகப்படியான புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய அளவில் விளையாட்டுக் கல்வி, இணைசார் கல்வி போன்ற அளவீடுகளிலும் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்றது.
    இந்நிலையில் 1500 புள்ளிகளின் தர அடிப்படையில் 1066 புள்ளிகள் பெற்ற ஜி.கே.உலகப் பள்ளி 29-வது இடத்தை பெற்று தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 34-வது இடத்தை பெற்றிருந்தது.
    சி-போஃர் அமைப்பால் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி.கே.உலகப்பள்ளிக்கு அதற்கான விருது வழங்கும் விழா புதுதில்லி உள்ள லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
    இதில், முதன்மை மேலாளர் (ஐ.சி.எஸ்.சி கவுன்சில்) கெர்ரி அரத்தூரிடம் இருந்து பள்ளி இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோர் விருதை பெற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai