சுடச்சுட

  

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூர் காதி பவனில் கதர் பட்டு விற்பனையை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
  வேலூர் சாரதி மாளிகையில் உள்ள சர்வோதய காதி பவனில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான கதர் விற்பனையை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.
  இந்த மையத்தில் கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடியும், கம்பளி ரகங்களுக்கு 15 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. நிகழாண்டில் ரூ. 4 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், சர்வோதய சங்கத் தலைவர் கருணாகரன், செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  முன்னதாக, காந்தி ஜயந்தியை  முன்னிட்டு கோட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai