சுடச்சுட

  

  அரக்கோணத்தில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு அகண்ட தீபம் ஏற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் உள்ள மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அரக்கோணம் வட்ட வேள்விக் குழு தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார்.  பொதுமன்ற தலைவி ஆர்.சங்கரி வரதன் விழாவை தொடங்கி வைத்தார். கோயிலில் சிறப்பு வேள்விகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதைத் தொடர்ந்து அகண்டதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர் சுடராக அக்டோபர் 10-ஆம் தேதி வரை எரிந்து கொண்டிருக்கும் என்பது
  குறிப்பிடத்தக்கது.
  விழாவில் மன்றத்தின் துணைத் தலைவர்கள் ஏ.எம்.கே.மோகனவேலன், சுபாஷ்வாசன், சக்திசரவணன், பொருளாளர் தசரதன், செயலர்கள் கணேசன், கதிரேசன், துணைச் செயலர்கள் ஜெயக்குமார், சரவணன், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai