Enable Javscript for better performance
நெமிலி பாலா பீடத்தில் பிரசன்னா - சிநேகா தம்பதிக்கு பாலரத்னா பட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நெமிலி பாலா பீடத்தில் பிரசன்னா - சிநேகா தம்பதிக்கு பாலரத்னா பட்டம்

    By DIN  |   Published on : 03rd October 2016 11:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெமிலி ஸ்ரீபாலாபீடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் திரைப்பட நட்சத்திர தம்பதி பிரசன்னா- சிநேகாவுக்கு பாலரத்னா பட்டங்கள் வழங்கப்பட்டன.
    அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீபாலாபீடத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவராத்திரி இன்னிசை விழா நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை நடைபெற்ற விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்தார். விழாவில் திரைப்பட நடிகர் பிரசன்னா தனது மனைவி நடிகை சிநேகாவுடன் பங்கேற்றார். இத்தம்பதிக்கு பாலரத்னா விருதை பீடாதிபதி எழில்மணி வழங்கினார்.
    விழாவில் பீட நிர்வாகி  மோகன்கிருஷ்ணா, நெமிலி இறைப்பணிமன்றச் செயலர் முரளீதரன், துணைத் தலைவர் கே.வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai