சுடச்சுட

    

    ஆற்காடு நகராட்சி 24-வது வார்டியில் பாஜக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் எஸ்.திலகவதி சபாபதி ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
     ஆற்காடு 24-வது வார்டுக்கு உள்பட்ட கெங்கையம்மன் கோயிலில் இருந்து தொடங்கி ராமலிங்கம் தெரு, முனுசாமி தெரு, நல்லதண்ணீர் குளத்தெரு, சுப்பிரமணியம் தெரு, கெங்கையம்மன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் பொதுமக்களை நேரில் சந்தித்தனர். இதில் நகரத் தலைவர் எஸ்.எஸ்.சபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் க,தணிகாசலம், வி.வி.பிரகாஷ், நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட அமைப்புசாரா அணித் தலைவர் ஏ.எஸ்.ராஜசேகர் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai