சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்த சிறுவன் இறந்தார்.
    வாணியம்பாடியை அடுத்த புல்லூரில் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கனநாச்சியம்மன் கோயில் அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்திக் கட்டி அங்கு தண்ணீரைத் தேக்கி வைத்துள்ளது. இந்த அணை அருகே வாணியம்பாடியைச் சேர்ந்த புகழேந்தி (8) திங்கள்கிழமை பிற்பகலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் திடீரென தவறி விழுந்த புகழேந்தி மூழ்கியதாகத் தெரிகிறது.
    இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு புகழேந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai