சுடச்சுட

    

    "புதுப்புது இயந்திரங்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 03rd October 2016 11:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாயத்தின் தேவைகளை அறிந்து புதுப்புது இயந்திரங்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என விஞ்ஞானி என்.பாலமுரளி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
    வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை அசோசியேஷன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மா.அருளரசு தலைமை வகித்தார். இயந்திரவியல் துறைத் தலைவர் எஸ்.நடராஜன் வரவேற்றார்.
    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஞ்ஞானி என்.பாலமுரளி கிருஷ்ணன் பேசியதாவது:
    சமுதாயத்தின் தேவைகளை அறிந்து புதுப்புது இயந்திரங்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும். மேலும் உலகளவில் விஞ்ஞானம், தொழில் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்றார்.
    விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியதாவது:
    நமது நாட்டில் பல்வேறு கிராமங்களில் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் புதுப்புது கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்றார்.
    இயந்திரவியல் துறை பேராசிரியர் பி.பிரவீன் ராஜ், பேராசியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் செயலாளர் எப்.அபுபக்கர் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai