சுடச்சுட

    

    பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஒலிப்பெருக்கியை பயன்படுத்த அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 03rd October 2016 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.ஏ.ராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தலாம். பொதுக் கூட்டம், ஊர்வலங்களில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த காவல் துறையிடம் எழுத்து மூலம் முன் அனுமதி பெற வேண்டும்.
     நிர்ணயிக்கப்பட்ட நேரங்களைக் கடந்து ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.
    டிரக்குகள், டெம்போ, கார், வேன், ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவோர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai