சுடச்சுட

    

    மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

    By DIN  |   Published on : 03rd October 2016 11:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செல்லிடப்பேசி எண்கள் விவரம் திங்கள்கிழமை வெளியிடப்
    பட்டது.
    வேலூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆணையர் த.குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது செல்லிடப்பேசி 94431-30701.
    ஆம்பூர் நகராட்சிக்கு மேலாளர் ஏ.தண்டபாணி (99940-86012), அரக்கோணத்துக்கு ஆணையர் டி.செளந்தரராஜன் (98415-26223), ஆற்காடு நகராட்சிக்கு மேலாளர் கே.தமிழரசு (99445-10320), குடியாத்தம் சி.கே.செந்தில்வேல் (99426-09693), ராணிப்பேட்டைக்கு எஸ்.பாரிஜாதம் (95666-77490) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    அதேபோல, திருப்பத்தூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக நகராட்சி பொறியாளர் எஸ்.அசோக்குமார் (98436-23363), வாணியம்பாடிக்கு எச்.கோபு (76394-03539), ஜோலார்பேட்டைக்கு எஸ்.முருகேசன் (94434-47656), மேல்விஷாரத்துக்கு எம்.ரமேஷ் (96004-90637), பேர்ணாம்பட்டுக்கு ஆணையர் ஜெ.விசாலாட்சி (99402-50379)
    ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் அதிகாரிகள் விவரம்:
    நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர், அணைக்கட்டு, வேலூரில் உள்ள வார்டுகள் 1,2,5,6,7,8,18,19,24 ஆகியவற்றுக்கு கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் எஸ்.திருகுண ஐயப்பதுரை (73387-49600), ஜோலார்பேட்டை, ஆலங்காயம், திருப்பத்தூர், மாதனூரில் வார்டு 3,4,9,10,16,17 ஆகியவற்றுக்கு கூட்டுறவுத் துறை மொத்த விற்பனை பண்டக சாலை இணை ஆணையர் காமாட்சி (94436-40356) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    வாலாஜா, காவேரிபாக்கம், ஆற்காடு, திமிரியில் உள்ள 28,29,30,31,32,33 வார்டுகளுக்கு கூட்டுறவுத் துறை ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இணை ஆணையர் எம்.உமாமகேஸ்வரி (94427-33777), பேர்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பத்தில் உள்ள 11,12,13,14,15,20 ஆகிய வார்டுகளுக்கு ஆம்பூர் சர்க்கரை ஆலை அதிகாரி கே.ஜெயம் (94437-69399), கே.வி.குப்பம், காட்பாடி, சோளிங்கரில் உள்ள 21,25,26,27,34 ஆகிய வார்டுகளுக்கு வேலூர் சர்க்கரை ஆலை தனி அலுவலர் ஏ.ராமசாமி (99437-77993), கணியம்பாடி, வேலூர், காவேரிபாக்கம், நெமிலி, அரக்கோணத்தில் உள்ள 22,23,35,36,37,38,39,40 ஆகிய வார்டுகளுக்கு மாவட்ட முதன்மைக் கலவி அலுவலர் ஆர்.பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai