சுடச்சுட

    

    அரக்கோணம் - சோளிங்கர் சாலைப்  போக்குவரத்தில் மாற்றம்

    By DIN  |   Published on : 05th October 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் தண்டவாளம், சாலை சீரமைப்புக்காக அச்சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர்.
     அரக்கோணம் நகரில் சோளிங்கர் சாலையில் சாலையின் குறுக்கே ரயில்வே பொறியியல் பணிமனைக்குச் செல்லும் தண்டவாளங்கள் இருந்தன. இவை சாலையின் உயரத்தை விட தாழ்ந்து இருந்ததால் அந்த இடத்தைக் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். பல வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. பல இரு சக்கர வாகன ஓட்டிகள் சிறு விபத்துகளைச் சந்தித்து வந்தனர். இதுகுறித்து ரயில்வே உயர் அலுவலர்களிடம் பல மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
     இந்நிலையில் தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையினருடன், தெற்கு ரயில்வே அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் இரு துறையினரும் சேர்ந்து 6-ஆம் தேதி முதல் 9ந்தேதி வரை நான்கு நாள்களுக்கு அச்சாலையில் போக்குவரத்தை நிறுத்தி சாலையை சீரமைக்க உள்ளதாக முடிவு செய்தனர். அதுகுறித்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.
     இதன்படி, 6-ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் ராம்கோ மேம்பாலத்தில் இருந்து கைனூர் மேம்பாலத்துக்கு திருப்பப்பட்டு குருவராஜபேட்டை, எம்.ஆர்.எப். வழியே திருத்தணி சென்று திருப்பதி செல்ல வேண்டும். மறு மார்க்கத்திலும் இதே பாதையிலேயே செல்ல வேண்டும். காஞ்சிபுரம், நெமிலி ஆகிய ஊர்களில் இருந்து அரக்கோணம் வரை வரும் வாகனங்கள் ராம்கோ பாலமுனையில் உள் ரவுன்டானாவில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தே புறப்படும்.
     இதேபோல் வேலூர், சோளிங்கரில் இருந்து வரும் வாகனங்களும் கைனூர் பாலமுனையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே புறப்படும். இரு, மூன்று, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இரட்டைக் கண் வாராவதி வழியே சென்று வரவேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் அக்டோபர் 6,7,8,9 ஆகிய நான்கு நாள்களும் அமலில் இருக்கும் என அந்த அறிவிப்பில் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai