சுடச்சுட

  

  ஆற்காடு வட்டம், கலவையை அடுத்த கோடாலி கிராமத்தில்  சித்தார்த்தர் சமூக சேவை மையம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை தொடக்க விழா, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் பி.ராஜசேகர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சரசா பழனி முன்னிலை வகித்தார். சென்னை தொழிலதிபர் கி.மு.திராவிடமணி, வாலாஜா சித்தார்த்தர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.சம்பத்குமார், செயலாளர் ரவி, வங்கி  ஊழியர் சங்கத் தலைவர் பி.தனராஜ், பொய்கை இரவு பள்ளிச் செயலாளர் மகா தினகரன் ஆகியோர் இரவு பாடசாலையை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
  இதில் அறக்கட்டளை செயலாளர் மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai