சுடச்சுட

  

  இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

  By DIN  |   Published on : 05th October 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து 17 பவுன் தங்க நகை திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  திருப்பத்தூரை அடுத்த அண்ணான்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (60). விவசாயியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் காந்திபேட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 பவுன் தங்க நகை அடகு வைத்திருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டு தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் செல்லும் வழியில் அண்ணான்டபட்டி கூட்டுச் சாலை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் குடிக்கச் சென்றார். இதையடுத்து வீட்டுக்குச் சென்று நகையை எடுக்க முயன்றபோது, பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அதிலிருந்த 17 பவுன் தங்க நகை காணாமல் போனது.
  இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஏகாம்பரம் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai