சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை: அதிர்ச்சியில் வேட்பாளர்கள்

    By DIN  |   Published on : 05th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கில் செலவு செய்த வேட்பாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
     மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி குழு உள்ளிட்ட 7,881 பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை (அக்.3) வரை நடைபெற்றது.
     அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்குள்ள செல்வாக்கை வெளிக்காட்டும் வகையில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டும் வகையில் பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் ஆரவாரத்துடன் மனு தாக்கல் செய்தனர்.
    மாவட்டம் முழுவதிலும் 28,657 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
     இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது, வேட்பாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai