சுடச்சுட

  

  போளூர் அருகே கடன் பிரச்னையில் வட்டார காங்கிரஸ் தலைவரைக் கடத்தியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
  போளூர் ஒன்றியம், காளசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மாணிக்கவேலு. வட்டார காங்கிரஸ் தலைவர். இவர் 2001- 2005-ஆம் ஆண்டில் காளசமுத்திரம் ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்தார்.
  அப்போது, ஆத்தூவாம்பாடி ஊராட்சித் தலைவராக இருந்த சாமிகண்ணு, மாணிக்கவேலுக்கு கடனாக ரூ. 2 லட்சம் கொடுத்தாராம்.
  ரூ. 90 ஆயிரம் வரை மாணிக்கவேலு கடனை திருப்பிச் செலுத்திய நிலையில், மீதமுள்ள ரூ. 1.10 லட்சத்தை அவரிடம் சாமிகண்ணு கேட்டு வந்தார்.
  இந்த நிலையில், தனது தாய் லட்சுமியை காங்கிரஸ் சார்பில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மாணிக்கவேலு திங்கள்கிழமை வந்தார்.
  அப்போது, அவரை சாமிக்கண்ணு காரில் அழைத்துச் சென்றாராம். அதன் பிறகு மாணிக்கவேலு குறித்த தகவல் தெரியவராததால், போளூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி சசிரேகா புகார் அளித்தார்.
  இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மாணிக்கவேலை சாமிக்கண்ணு சென்னைக்கு காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
  இதைத் தொடர்ந்து, போலீஸார் சென்னை சென்று அவரை மீட்டனர். இதுதொடர்பாக சாமிக்கண்ணு (57), அவரது மகன் கோட்டீஸ்வரன் (34) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai