சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே திருட்டு வழக்கு தொடர்பாக 3 பேரை விசாரணைக்காக அடிக்கடி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை
    முற்றுகையிட்டனர்.
     திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உடைத்து 13 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோபி அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரவி (30), அவரது உறவினர்களான திருநாவுக்கரசு (35), அன்பழகன் (32) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில், விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தொடர்ந்து விசாரணைக்காக 3 பேரையும் 4 நாள்களாக காவல் நிலையத்திலேயே வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரையும்
    விடுவித்தனர்.
     இதையடுத்து ரவி உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் தினந்தோறும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி விட்டு வீட்டுக்கு அனுப்பி வந்ததாகத் தெரிகிறது.
    இந்நிலையில் ரவி உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் மீண்டும் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்ததாகத் தெரிகிறது.  இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவல் ஆய்வாளர் செந்திலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது "3 பேரும் குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள். அதனை விட்டுவிட்டு விசாரணை என்ற பெயரில் நாள்தோறும் அழைத்துச் செல்வதால் ஊருக்குள் மூன்று குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது' எனக் கூறினர். இதையடுத்து ஆய்வாளர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai