சுடச்சுட

  

  ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த ஓச்சேரி கந்தன் கருணையின் ஸ்ரீ சப்தகிரி பொறியியல் கல்லூரி மாணவருக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   இக்கல்லூரியில் இயந்திரவியல் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் எம்.தினேஷ்குமார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் 6-வது மண்டலம் சார்பில் கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
   அவருக்கு ஓச்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தினேஷ்குமாரை கல்லூரியின் தலைவர் எம்.அருண்குமார், செயலாளர் பி.ரமேஷ், இயக்குநர் பி.கிருஷ்ணா, பொருளாளர் வி.அருண் ஆனந்த், துணைத் தலைவர் எ.தமிழ்செல்வி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
  மேலும் கல்லூரி முதன்மை அதிகாரி எம்.செந்தில், கல்லூரி முதல்வர் எ.குமார், உடற்கல்வி இயக்குநர் சி.ஜோஷ்வா பிரபு ஆகியோர் பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai