Enable Javscript for better performance
தேர்தல் தடை: நீதிமன்ற உத்தரவால் குழப்பமடைந்த அலுவலர்கள்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் தடை: நீதிமன்ற உத்தரவால் குழப்பமடைந்த அலுவலர்கள்

    By DIN  |   Published on : 05th October 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேட்புமனு பரிசீலனை பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அலுவலர்கள் பணியை தொடருவதா? வேண்டாமா? என்ற குழப்பத்துக்கு
    உள்ளாயினர்.
    உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுகவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் நடத்த தடை விதித்து செவ்வாய்க்கிழமை மதியம் உத்தரவிட்டது. இச்செய்தி தொலைக்காட்சிகளில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அறிந்த தேர்தல் அலுவலர்கள்
    குழப்பமடைந்தனர்.
    3-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்று வந்தது. அரக்கோணம் நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் ஆகிய இரு இடங்களிலும் பரிசீலனைக்காக வேட்பாளர்கள் நேரில் பங்கேற்ற நிலையில், பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    மதியம் மூன்று மணி அளவில் திடீரென தேர்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட செய்தி வெளியான நிலையில் நகராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களிடையே தொய்வு ஏற்பட்டது. அனைவரும் பணிகளை நிறுத்தி தங்களது மேலதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
    மாலை 5 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழியாக வந்த உத்தரவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முடிக்க வேண்டிய பணியை முடிக்குமாறு தேர்தல் அலுவலர்கள் பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து பரிசீலனைகள் தொடர்ந்தன.
    அரக்கோணம் நகராட்சியில் மொத்தம் பெறப்பட்ட 198 மனுக்களில் 5மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    3-ஆம் வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்தியாபாபுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நகராட்சி வாக்காளர் பட்டியலில் எந்த வார்டிலும் வேட்பாளர் சந்தியாபாபுவின் பெயர் இல்லாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இவருக்கு மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சரஸ்வதியின் மனு ஏற்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai