சுடச்சுட

  

  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 32.53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

  By DIN  |   Published on : 05th October 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரு வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 32.53 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  வேலூர் அருகே பலவன்சாத்து குப்பம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் மணிகண்டன்(20). மெக்கானிக்கான இவர் கடந்த 2012 ஜனவரி 14-ஆம் தேதி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட விபத்தில் இறந்தார்.
  இதையடுத்து உரிய இழப்பீடு கோரி மணிகண்டனின் தாய் லட்சுமி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன், உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 11 லட்சத்து 85 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.
  அதேபோல, ஆற்காட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான மணிவண்ணன் (26) கடந்த 2009 ஜனவரி 25-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதியதில் உயிரிழந்தார்.
  இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன், இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சத்து 68 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai