சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே பாம்பு முட்டைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
  ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் அருந்ததி காலனி பகுதியில் வசிக்கும் மேகநாதன் வீட்டின் பின்புறமாக கசிவு நீர் கால்வாய் செல்கிறது. இதன் கரை மேல்பகுதியில் புற்று உருவாகி அதில்
  20-க்கும் மேற்பட்ட பாம்பு முட்டைகள் இருந்தன.
  புதன்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கால்வாய் ஓடை பகுதியருகே சென்றுள்ளனர். அப்போது புற்றில் இருந்த  முட்டைகளை காளான் எனக் கருதி எடுக்கச் சென்றுள்ளனர்.
  அப்போது அங்கு மறைந்திருந்த கருநாகம் சீறியுள்ளது. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அவர்களையும் அருகில் நெருங்க விடாமல் பாம்பு சீறியதாகத் தெரிகிறது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினர் அங்கு சென்று பாம்பு முட்டைகளைப் பார்வையிட்டனர். பாம்புகள் வெளியில் வரும்போது தகவல் தெரிவித்தால் அவற்றைப் பிடித்துச் சென்று காட்டில் விட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்து விட்டு சென்று விட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai