இந்து முன்னணியினர் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: அர்ஜுன் சம்பத்
By DIN | Published on : 06th October 2016 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்து முன்னணியினர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேரிட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை புதன்கிழமை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், இந்து முன்னணியினர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக பாஜகவினர் வலியுறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.