சுடச்சுட

  

  வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
   தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளில் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள், ரூ. 5.2 லட்சம் மதிப்பில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் மின் தகடை
  பார்வையிட்டார்.
  குப்பம் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இலவசமாக கட்டித் தரப்படும் தனிநபர் கழிப்பறைகளை பார்வையிட்ட ஆட்சியர், முழு சுகாதாரக் கிராமமாக அறிவித்திட ஒத்துழைக்க வேண்டும் என அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டார்.
  ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai