சுடச்சுட

    

    சென்னை மெரீனா கடலில் குளித்தபோது, அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமான கல்லூரி மாணவர், எண்ணூர் துறைமுகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்
     வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், நபில் அகமது (21), சாஹாமான்(21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் கல்லூரிகளில் படித்து வந்தனர்.
     இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதியன்று நபில் அகமதுவும், சாஹாமானும் மெரீனா கடற்கரைக்கு சென்று, கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய  இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, மாயமாகினர்.
     இந்நிலையில், எண்ணூர் துறைமுகம் பகுதியில் நபில் அகமதுவின் சடலம் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர், மீஞ்சூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், நபில் அகமது சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு மாணவரான சாஹாமானும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai