சுடச்சுட

    

    குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில், சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை குறித்த அலகு தொடக்க விழா, மின் சிக்கனம், மின் உற்பத்தி முறை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஆர்.அமுதா தலைமை வகித்தார். மின்னியல் துறைத் தலைவர் ஆர்.ராஜாராம் வரவேற்றார். திருப்பத்தூர் கோட்ட மேற்பார்வை மின் பொறியாளர் டி.ராஜேந்திரன் சூரிய மின் அலகை தொடங்கி வைத்து, சூரிய ஒளியில்
    மின் சக்தியை பயன்படுத்தி எவ்வாறு பயன்பெறலாம் என்றும், மின் சிக்கன முறையும், பாதுகாப்பு முறை குறித்தும் விளக்கினார்.
    செயற் பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) வி.எம்.வெங்கடாசலபதி சூரிய ஒளி மின் சக்தி பராமரித்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
    திருப்பத்தூர் மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர்
    ஆர்.குமரேசன், கணேசன், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி மின்னியல் துறை விரிவுரையாளர் எஸ்.தனசேகர் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai