கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 06th October 2016 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு மாவட்ட கல்லூரி பேராசிரியர்கள் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பிரதான நுழைவு வாயில் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக ஆசிரியர் தினமான புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்தார். இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.